Current Affairs – 6 August 2018
தமிழகம்
1.உயர்நீதிமன்றம் விதித்த தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூட்டுறவு சங்கத் தேர்தல் நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியா
1.இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும், அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
2.சந்திராயன் -2 திட்டத்தை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
3.பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் எண்ணிக்கையில் 85 லட்சம் பேர் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.அடுத்த கட்ட அலைக்கற்றை ஏலத்துக்கான அறிவிப்பை தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) கடந்த வாரம் வெளியிட்டது.
உலகம்
1.இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் என்ற தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
1.உலக பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் கரோலினா மரின்.
2.ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதை எடுத்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் முதலிடத்தை பெறும் 7-ஆவது இந்திய வீரர் எனற பெருமையையும் பெற்றுள்ளார்.
இன்றைய தினம்
- பொலீவியா – விடுதலை நாள் (1825)
- ஜமெய்க்கா – விடுதலை நாள் (1962)
- ஜப்பான் – டோரோ நாகாஷி – ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.
–தென்னகம்.காம் செய்தி குழு