தமிழகம்

1.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்(91)  சென்னையில் காலமானார்.’சிலம்புச் செல்வர்’ மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டிருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அறியப்பட்டவர்.தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்தது சிலம்பொலி செல்லப்பன் வகுத்த தனித்த நெறியாகும்.

2.லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் அதிமுக வழக்குரைஞர் பிரிவுச் செயலர் ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


இந்தியா

1.தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

2.மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த ஆதார் அவசரச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.


வர்த்தகம்

1.சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு செயல்பாட்டு லாபம் 60 சதவீதம் சரிந்துள்ளது.


உலகம்

1.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) காலக் கெடுவை, அடுத்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு நீட்டிக்குமாறு அந்த அமைப்பிடம் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

2.நிலவுக்கு மனிதர்களை ஏந்திச் செல்லுவதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வடிவமைத்து வரும் ராக்கெட்டின் ஆர்எஸ்-25 ரக என்ஜின் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.


விளையாட்டு

1.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்  தோல்வி அடைந்தார்.


ன்றைய தினம்

  • செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது(1869)
  • 1500 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின(1896)
  • ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது(கிமு 648)
  • திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது(1947)

– தென்னகம்.காம் செய்தி குழு