Current Affairs – 5 September 2019
தமிழகம்
1.தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.2,780 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தங்களால் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2.சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ஐஎஸ்ஓ:14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பொது நிர்வாகத் துறை வெளியிட்டது.
2.சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட லேண்டர் பகுதி, நிலவுக்கு மிக அருகே 35 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.எல்.ஐ.சி., நிறுவன, தென் மண்டலத்தின், 2019 – 20ம் நிதி ஆண்டு இலக்காக, 12 ஆயிரத்து, 800 கோடி ரூபாய்
நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது,’’ என, அதன் மேலாளர் தெரிவித்தார்.
உலகம்
1.இந்தியா, ரஷ்யா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
2.ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை நிரந்தரமாக திரும்பப் பெறப்போவதாக அந்த நகர தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.
விளையாட்டு
1.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தோல்வி கண்டார். அவரை, உலகின் 78-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் வீழ்த்தினார்.
இன்றைய தினம்
- இந்திய ஆசிரியர் தினம்
- இந்தியாவின் 2வது ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்(1872)
- புனிதர் அன்னை தெரசா இறந்த தினம்(1997)
- மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)
– தென்னகம்.காம் செய்தி குழு