தமிழகம்

1.மத்திய அரசின் 15-ஆவது நிதிக் குழுவினர் புதன்கிழமை சென்னை வருகின்றனர். நிதி, பொருளாதாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து இரண்டு நாள்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.

2.போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.


இந்தியா

1.மேகாலய முதல்வர் கான்ராட் கே சங்மா தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். மேகாலயத்தின் தெற்கு துரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏவாக புதன்கிழமை பதவியேற்கவுள்ளார்.

2.ரூ. 4. 2 லட்சம் கோடி செலவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.டாடா கன்­சல்­டன்சி நிறு­வ­னத்­தின் சந்தை மூல­த­னம், நேற்று, 8 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­தது.

2.இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முதலீடு ஜூலை மாதத்தில் 36 சதவீதம் குறைந்துள்ளது.

3.1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிளை அடுத்து இடம்பிடித்த 2வது நிறுவனம் என்ற பெருமையை அமேசான் பெற்றுள்ளது.


உலகம்

1.இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையே முதலாவது பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

2.பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி தேர்வு செய்யப்பட்டார்.


விளையாட்டு

1.அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து 9-ஆவது முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
5 முறை சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 4-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவாவும் வெளியேற்றப்பட்டார்.

2.ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.
10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் செளரவ் செளதரி-அபிநயா பாட்டீல் இணை வெண்கலம் கைப்பற்றியது.


ன்றைய தினம்

  • இந்திய ஆசிரியர் தினம்
  • இந்தியாவின் 2வது ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்(1872)
  • புனிதர் அன்னை தெரசா இறந்த தினம்(1997)
  • மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)
  • தென்னகம்.காம் செய்தி குழு