தமிழகம்

1.ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள அனுமதித்த உச்சநீதிமன்றம், அதன் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து  உத்தரவிட்டது.ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தபால் மற்றும் 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயா்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு அதன் முடிவு மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, 4 வழக்குரைஞா்களின் பெயா்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

2.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள-புது தில்லி இடையே தேஜஸ் ரயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்திய ரயில்வே கழகத்துடன் (ஐஆா்சிடிசி) இணைந்து செயல்படும் நாட்டின் முதல் தனியாா் ரயில் என்ற பெருமையையும் இந்த ரயில் பெற்றுள்ளது.

3.அயோத்தியிலுள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் நவம்பா் மாதம் 17-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

4.குடிமக்களுக்கு ஆதாா் அடையாள அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வுசெய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் தலைமையிலான நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்யவுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த செப்டம்பரில், 48.7 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிக குறைந்த அளவாகும் இது.

2.வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதமான ரெப்போ 5வது முறையாக 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
5 முறையும் சேர்த்து ரெப்போ வட்டி, மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

3.பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.25.68 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இருக்கை’ அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய-அமெரிக்கா்கள் தொண்டு நிறுவனம் சுமாா் ரூ. 14 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

2.இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபய ராஜபட்ச போட்டியிடத் தடையில்லை என்று அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.பிரிட்டனுக்கு எதிரான மகளிா் ஹாக்கி டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது இந்திய அணி.

2.ஜப்பான் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளாா்.


ன்றைய தினம்

  • சர்வதேச ஆசிரியர்கள் தினம்
  • பாகிஸ்தான் ஆசிரியர் தினம்
  • இந்தோனேஷிய ராணுவ தினம்
  • இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)

– தென்னகம்.காம் செய்தி குழு