தமிழகம்

1.தேசிய தூய்மைப் பள்ளி விருதுக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோ. பாலசுப்பிரமணியன்  பொறுப்பேற்றார்.

3.கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை, தமிழக சிறைகளில் 157 கைதிகள் மரணமடைந்துள்ளனர் என அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

4.தமிழக காவல் துறையில் 3 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.தமிழக காவல்துறையில் 4 ஐ.ஜி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டார்.


இந்தியா

1.ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தார். இந்தியா- ரஷ்யா இடையேயான 19-ஆவது வருடாந்திர மாநாடு, தில்லியில் இன்று நடைபெறவுள்ளது.

2.விமானப் பயணிகள் விமான நிலையங்களுக்குள் செல்ல விரைவில் முக அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட “பயோமெட்ரிக்’ அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

3.மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(சிஆர்பிஎஃப்) புதிதாக சேர்க்கப்படும் 21,000 வீரர்களுக்கான பயிற்சி முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் கடந்த ஆறு மாதங்களில் ரூ.5.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 16.7 சதவீதம் அதிகமாகும்.

2.தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக சந்தா கோச்சார் அறிவித்தார். இதையடுத்து, அப்பொறுப்பிற்கு சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

3.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-க்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை ஒதுக்குவதற்கு ஐடிபிஐ வங்கியின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.

4.அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு மீண்டு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் 73.81 வரை வீழ்ச்சி கண்டது.

5.ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ரூ. 3. 48 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து 11-ஆவது முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.


உலகம்

1.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார்.

2.ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 இடைமறி ஏவுகணை தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது உறுதி என்று அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3.மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக, சில தனிநபர்கள் உள்பட 78 நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது. இதில் இந்திய நிறுவனங்களும் அடங்கும். இதன் மூலம் அந்த நிறுவனங்கள், உலக வங்கியின் சார்பாக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

4.சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு கோளை, நிலவு ஒன்று சுற்றி வருவதை விஞ்ஞானிகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக கொலம்பியப் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8,000 ஒளி வருட தொலைவில் உள்ள அந்த பிரம்மாண்டமான வாயு கோளை, அதன் நிலவு சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நெப்டியூன் அளவுக்கு மிகப் பெரிதான ஒரு கோளை நிலவு சுற்றி வருவது மிகவும் அபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.இந்திய வீரர் பிருத்வி ஷா 134 ரன்கள் குவித்து, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர்’ என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிருத்வி ஷா: (18 வருடம், 329 நாள்கள்; 99 பந்துகளில் சதம்)

– தொடக்க வீரராகச் சதமடித்த 2-வது இளம் வீரர்
– டெஸ்ட் சதமடித்த 2-வது இளம் இந்திய வீரர்
– முதல் டெஸ்டில் சதமடித்த 3-வது இளம் வீரர்
– அறிமுக டெஸ்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த 3-வது வீரர்
– அறிமுகமான முதல் தர கிரிக்கெட்டிலும் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த வீரர்
– முதல் ரஞ்சிப் போட்டி, முதல் துலீப் போட்டி, முதல் டெஸ்ட் என மூன்றிலும் சதமடித்த வீரர்

2.சீன தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

3.சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • சர்வதேச ஆசிரியர்கள் தினம்
  • பாகிஸ்தான் ஆசிரியர் தினம்
  • இந்தோனேஷிய ராணுவ தினம்
  • இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)
  • தென்னகம்.காம் செய்தி குழு