தமிழகம்

1.கடலில் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் வகையில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) தயாரித்துள்ள டிரான்ஸ்பான்டர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்க தமிழக மீன்வளத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்.யூ. ஆர். கோடு, தீக்ஷா செயலி ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், “க்யூ.ஆர்.,’ கோடு மூலமாக கற்பிக்கும் முறை நிகழாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.தில்லி யமுனை நதிக்கரையில், சிக்னேச்சர் பாலம் திறப்பு விழா  நடைபெற்றது.

2.வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத நிதி மோசடியாளர்களின் பட்டியலை வெளியிடாமல் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

3.கங்கை நதியில் விடப்பட்டுள்ள நாட்டின் முதலாவது நீர்வழித்தட கப்பலை, வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி நேரில் வரவேற்கவுள்ளார்.


வர்த்தகம்

1.பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.54,000 கோடியை கூடுதல் மூலதனமாக அளிப்பது குறித்து இம்மாத இறுதியில் மத்திய அரசு முடிவு செய்ய இருக்கிறது.


உலகம்

1.இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

2.முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி  ஷாங்காய் நகரில் தொடங்கியது.


விளையாட்டு

1.உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென் தலைமையில் இந்திய வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

2.அருணாச்சலப்பிரதேசம் இடா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்ஆர்எப் எப்எம்எஸ்சிஐ (MRF-FMSCI)ஐஎன்ஆர்சி(Indian National Rally Chaampoinship) தேசிய கார் பந்தயத்தில் அமித்ரஜித் கோஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

3.பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் ரஷிய வீரர் காரென் கச்சனோவ்.


ன்றைய தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)
  • இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)
  • ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)
  • கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)
  • தென்னகம்.காம் செய்தி குழு