தமிழகம்

1. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை, தூத்துக்குடியில் 36-ஆவது வணிகர் தின மாநாடு இன்று நடைபெறவுள்ளது.


இந்தியா

1.மக்களவைக்கு 5-ஆவது கட்டமாக, 51 மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,851 கோடி டாலரை (ரூ.29.29 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

2.வட கொரியா மீண்டும் குறுகிய தொலைவு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • டென்மார்க் விடுதலை தினம்(1945)
  • எதியோப்பியா விடுதலை தினம்(1941)
  • ஜெர்மனிய தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்(1818)
  • பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்(1916)
  • தென்னாப்பிரிக்காவில் ஆப்ரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது(1925)

– தென்னகம்.காம் செய்தி குழு