தமிழகம்

1.தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2.மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


இந்தியா

1.மின்சாரத் துறையில் இந்தியா சிறப்பாகச் செயல்படுவதாகவும், நாட்டில் சுமார் 85 சதவீதம் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

2.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்களுக்காக ‘யுமாங்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

3.கடந்த நிதியாண்டில் 30 சதவீத ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில், கடந்த ஆண்டு மட்டும் அதிக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.

 


வர்த்தகம்

1.வரி தாக்கல் நடைமுறைகளை எளிமையாக்குவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

2.தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் கடந்த ஆண்டில் ரூ.2.55 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.


உலகம்

1.இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டில் நிறுத்தி வைப்பதாக அந்தப் பரிசை வழங்கும் ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.டோஹாவில் வரும் 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டியில் பல்வேறு மாறுதல்களை சர்வதேச தடகள சம்மேளனம் (ஐஏஏஎஃப்) நடைமுறைப்படுத்துகிறது.
குறிப்பாக காலை நேரத்தில் போட்டிகள் நடத்துவது முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. புதிதாக கலப்பு 4/400 மீ தொடர் ஓட்டம், நடுஇரவு மாரத்தான் (மிட்நைட்) போட்டிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.


ன்றைய தினம்

  • டென்மார்க் விடுதலை தினம்(1945)
  • எதியோப்பியா விடுதலை தினம்(1941)
  • ஜெர்மனிய தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்(1818)

–தென்னகம்.காம் செய்தி குழு