தமிழகம்

1.தமிழகத்தில் 6,028 பள்ளிகளில் ரூ.515 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நபார்டு திட்டம் மூலம் புதிதாகக் கட்டடப் பட்ட பள்ளிக் கட்டடங்களையும், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காணொலிக்காட்சி நிகழ்வின் மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.


இந்தியா

1.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.


வர்த்தகம்

1.நடப்பு ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாத காலத்தில், காபி ஏற்றுமதி 13.26 சதவீதம் உயர்ந்துள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தி வருகின்றன.

2.செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஏரியாக இருந்தவை காலப்போக்கில் நிலத்தடி நீராக மாறியுள்ளதாகவும், அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான கனிமங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு

1.சீனாவின் ஹான்டு நகரில் வரும்2022 இல் நடைபெறவுள்ள ஆசியப்போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • ஈரான் தேசிய மரம் நடுதினம்
  • இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்தது(1964)
  • ஐரோப்பாவின் முதல் விமானமான குலோஸ்டர் மெட்டர் பறக்க விடப்பட்டது(1943)
  • பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது(1824)

– தென்னகம்.காம் செய்தி குழு