தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகள் மாயமான வழக்குகளை விசாரித்து வந்த இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை கலைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக விஞ்ஞானி மிருத்யுஞ்ஜய் மஹாபாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

2.எய்ட்ஸ் நோய் உயிரிழப்புகள் 70 சதவீதம் வரை குறைந்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

3.பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5-வது நிர்வாகக் குழுக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி கூடுகிறது.

4.ஆராய்ச்சி உதவித் தொகையை உயா்த்தி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


வர்த்தகம்

1. சாம்சங் இந்தியா நிறுவனம் டிவி விற்பனையில் அதன் பங்களிப்பை 34 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

2.பென்னா சிமென்ட் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ.) மூலம் ரூ.1,550 கோடி திரட்டிக் கொள்ள செபி அனுமதி அளித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது


விளையாட்டு

1.தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன் போட்டி 2019 சீசனில் 200-300 சிசி பிரிவில் ஹோண்டா இந்தியா அணி கலந்து கொள்கிறது.


ன்றைய தினம்

  • உலக சுற்றுச்சூழல் தினம்
  • டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்
  • முதலாவது தனிக்கணினியான ஆப்பிள் 2 விற்பனைக்கு வந்தது(1977)
  • சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)

– தென்னகம்.காம் செய்தி குழு