Current Affairs – 5 June 2018
தமிழகம்
1.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுக் கணக்காய அலுவலகத்தின் (ஏ.ஜி.அலுவலகம்) தலைவராக டி.ஜெய்சங்கர் பொறுப்பேற்றார்.
2.தமிழகத்தின் சென்னை, கோவை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
3.அவசர காலத்தில் 100 என்ற எண்ணை டயல் செய்யாமலேயே செயலி மூலமாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தியா
1.இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, ஐடிபிஐ வங்கி மேலாண் இயக்குநர் எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டார்.
2.ஆயுத தளவாட கொள்முதலுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதை அடுத்து, இந்திய ராணுவத்துக்கு வாங்க முடிவு செய்யப்பட்ட தாக்குதல் ரக ரைபிள் துப்பாக்கிகள் எண்ணிக்கையை 2.50 லட்சமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் (எஸ்எம்சி) இந்தியாவில் உற்பத்தி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
உலகம்
1.திறன் மேம்பாடு, விவசாயம், தகவல் தொழில் நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, தென் ஆப்ரிக்க அதிபர், சிரில் ராமபோஸாவுடன், வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் பேச்சு நடத்தினார்.
விளையாட்டு
1.மும்பையில் நடந்து வரும் 4 நாடுகள் இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது.
2.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் ரஃபேல் நடால், ஜோகோவிச் உள்ளிட்டோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இன்றைய தினம்
- உலக சுற்றுச்சூழல் தினம்
- டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்
- முதலாவது தனிக்கணினியான ஆப்பிள் 2 விற்பனைக்கு வந்தது(1977)
- சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)
–தென்னகம்.காம் செய்தி குழு