தமிழகம்

1.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.158 கோடியில் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.

2.மின் கணக்கெடுப்புக்காக விரைவில் வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

3.தமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


இந்தியா

1.மத்திய பட்ஜெட்  (ஜூலை 5) தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
மத்தியில் பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

2.மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேறியது.
வங்கிக் கணக்குகளை தொடங்கவும், செல்லிடப் பேசி சிம் கார்டு வாங்கவும் ஆதாரை அடையாள ஆவணமாக விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் ஆதார் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

3.இந்தியாவில் சராசரியாக 1,457 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.பிரதமர், மோடி தலைமையிலான, புதிய அரசின், முதல் பொருளாதார ஆய்வறிக்கையை, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஜூன் மாதத்தில், சரிவினை சந்தித்துள்ளது என, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு, 49.6 புள்ளிகளாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்த மே மாதத்தில் 50.2; ஏப்ரலில் 51.0; மார்ச்சில், 52; பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது.


உலகம்

1.இருபத்தி எட்டு அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா புகார் அளித்துள்ளது.

2.கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்கா ரத்து செய்தால்தான் அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு ஜோகோவிச், ஆஷ்லி பர்டி, சிறுமி கோரி கவுப் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

3.கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பாருபல்லி காஷ்யப், செளரவ் வர்மா தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • அல்ஜீரியா விடுதலை தினம்(1962)
  • ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)
  • சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)
  • சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)
  • பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)

– தென்னகம்.காம் செய்தி குழு