தமிழகம்

1.பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ரூ.10 கோடியில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி பேரவையில் அறிவித்தார்.

2.மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு விரைவில் ரூ.35 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.


இந்தியா

1.தில்லியின் ஆட்சி நிர்வாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பளித்தது.

2.கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.பாங்க் ஆப் சீனா இந்தியாவில் கிளை திறக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உரிமம் அளித்துள்ளது.

2.மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸா கார் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்ட 28 மாதங்களில் 3 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.


உலகம்

1.துபாய் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தியச் சிறுவன் ஃபயஸ் முகமதுக்கு  “நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதர்’ என்ற சிறப்பு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1. விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா தோல்வியடைந்தார்.அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6–4, 6–3 என, தாய்லாந்தின் லுக்சிகாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் பல்கேரியாவின் விக்டோரியா டோமோவாவை வீழ்த்தினார். கரோலின் வோஸ்னியாக்கி 4–6, 6–1, 5–7 என்ற கணக்கில் ரஷ்யாவின் எகடரினா மகரோவாவிடம் தோல்வியடைந்தார்.


ன்றைய தினம்

  • அல்ஜீரியா விடுதலை தினம்(1962)
  • ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)
  • சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)
  • சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)
  • பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)

–தென்னகம்.காம் செய்தி குழு