Current Affairs – 5 January 2019
தமிழகம்
1.திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கே. கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2.தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
3.தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 601 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இந்தியா
1.வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
2.நாட்டில் நிறுவனங்கள் தொழில் செய்வதை எளிதாக்க வழிவகுக்கும், நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வர்த்தகம்
1.திருப்பூரில், கடந்தாண்டின் முதல், 11 மாதத்தில், மத்திய, ஜி.எஸ்.டி., வரி வசூல், 197.50 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
2.இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகம்
1.அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பட்ஜெட் மசோதாவை, டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ சுவர் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலேயே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றியது.
2.வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்ட அமெரிக்க – சீன பேச்சுவார்த்தை, சீனாவில் வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு
1.கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
2.ஐடிடிஎஃப் சார்பில் உலக தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரத்கமல், ஜி.சத்யன் ஆகியோர் முறையே 30, 31-ஆவது இடங்களை தக்க வைத்துள்ளனர். ஹர்மித் தேசாயும் முதல் 100 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
மகளிர் தரவரிசையில் நட்சத்தில வீராங்கனை மனிகா பத்ரா 51-ஆவது இடத்தில் உள்ளார்.
இன்றைய தினம்
- அமெரிக்க தேசிய பறவை தினம்
- பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1940)
- நாசிக் கட்சி அமைக்கப்பட்டது(1918)
- உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்பர்ணில் நடைபெற்றது(1971)
- டெய்லி மெயில்,கடல் தாண்டி சென்ற முதல் செய்தி தாளானது(1944)
– தென்னகம்.காம் செய்தி குழு