தமிழகம்

1.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்க உள்ளார்.அவரது நினைவிடம் உள்ள அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் இந்த திறப்பு விழா நடைபெற உள்ளது.


இந்தியா

1.சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
2.விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ் உதவித் தொகை பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் எண் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3.இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.பாண்டியன் கிராம வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கி ஒருங்கிணைந்து தமிழ்நாடு கிராம வங்கி என்ற புதிய பெயரில் செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது


உலகம்

1.தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி அனுப்ப பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் விசாரணைக்காக மல்லையா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவரப்படுவது உறுதியாகிவிட்டது.
2.மத்திய அமெரிக்க நாடான எல்சால்வடாரில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் மேயர் நயீப் புக்கேலே வெற்றி பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.மெதுவாக பந்து வீசியதற்காக மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க ஐசிசி தடை விதித்துள்ளது.


ன்றைய தினம்

1.மெக்சிகோ அரசியலமைப்பு தினம்(1917).
2.ரீடர்ஸ் பைஜஸ்ட், மாத இதழின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது(1922).
3.ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது(1960).
4.தென் கரோலினா, அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலமானது(1778).

– தென்னகம்.காம் செய்தி குழு