தமிழகம்

1.மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

2.வானவில் பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு கலை, பண்பாடு, தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் சார்பில் சனிக்கிழமை தொடங்கும் (டிச. 8) பாரதி திருவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

3.இணையதளம் மூலம் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் திட்டம் விரைவில் தமிழக காவல்துறையால் அமல்படுத்தப்பட உள்ளது.


இந்தியா

1.சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாடமியின் பிரதான விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ஜிசாட்-11 செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

3.நாடு முழுவதும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக அகில இந்திய நீதிமன்ற சேவைகள் என்ற அமைப்பை ஏற்படுத்துமாறு கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

4.நாட்டில் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் இதுவரை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.


வர்த்தகம்

1.இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 8,000 கோடி டாலரை (ரூ.5.60 லட்சம் கோடி) எட்டும் என பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.

2.புதிய, எளிமையான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவங்கள், 2019, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன, என மத்திய வருவாய் துறை செயலர், அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.


உலகம்

1.வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்ற இந்திய- ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு(யுஏஇ) இடையேயான கூட்டுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2.பிரான்ஸில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்துவதற்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டங்களையடுத்து, அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பி பிரிவில் இங்கிலாந்தை 3-0 என வீழ்த்தி, காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா.

2.பிரான்ஸ் கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான
பேலன் டி ஆர்-ஐ குரோஷிய கால்பந்து அணி கேப்டன் லுகா மொட்ரிக் வென்றுள்ளார். இதன் மூலம் இவ்விருதைப் பெறுவதில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த ரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

  • தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தினம் (2016)
  • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இறந்த தினம் (2013)
  • தாய்லாந்து தேசிய தினம் மற்றும் தந்தையர் தினம்
  • உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த தினம்(1901)
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தர் இறந்த தினம்(1950)
  • எஸ்.டி.டி., தொலைப்பேசி இணைப்பு சேவை ஐக்கிய ராஜ்யத்தில் 2ம் எலிசபெத் ராணியால் துவங்கப்பட்டது(1958)
  • பிரெஞ்ச் நாணயமான பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது(1360)
  • தென்னகம்.காம் செய்தி குழு