தமிழகம்

1.15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு இந்த திரைப்பட விழாவை நடத்துகின்றது.
2.இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.இதையொட்டி அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.


இந்தியா

1.மூத்த இந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் திங்கட்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 79.


வர்த்தகம்

1.சர்வதேச அளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 தளத்தில் இது கிடைக்கிறது.


உலகம்

1.பேஸ்புக் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை லண்டன் நகரில் தொடங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் (International Volunteer Day for Economic and Social Development).
தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும். இதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை தனியார் நிறுவனங்களும் 2006ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடுகின்றன.

 

–தென்னகம்.காம் செய்தி குழு