Current Affairs – 5 August 2019
தமிழகம்
1.வேலூர் மக்களவை தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
2.தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் சாகுபடியை அதிகரிக்க பாசன வசதியில்லாத இடங்களில் நீர்ப்பாசனத்துக்கு ஆழ்துளைக் கிணறு போடுவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தோட்டக்கலைத்துறை தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியா
1.பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2.மத்திய அரசு செயல்படுத்தி வரும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் 46 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்து வருவதாக நிதி ஆயோக்(NITI Aayog) அமைப்பு தெரிவித்துள்ளது.
3.தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள அதிநவீன ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
4.நாடு முழுவதும் 4,000 விசாரணை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.
வர்த்தகம்
1.இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பாலிசிகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.‘டெர்ம் திட்டங்கள், எண்டோமெண்ட், யூலிப் பாலிசிகள், பென்ஷன்’ திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நெறிமுறைகள் பொருந்தும். புதிய நெறிமுறைகள் பாலிசிகளின் அம்சங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளன.
2.சொந்த வீடு வாங்க, இந்தியர்கள் வாங்கும் கடன் மற்றும் வீட்டுக்கடனுக்காக செலுத்தும் தொகை அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
மும்பை உள்ளிட்ட நகரங்களில், வீடு வாங்கும் தன்மை மேலும் கடினமாகியுள்ளது.இந்தியாவில் வீட்டிற்கான சராசரி விலை, சராசரி இந்தியரின் மாத வருமானத்தில், 61.5 மடங்காக இருப்பதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, குடியிருப்பு வீடு விலை தொடர்பான அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம்
1.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்கி ஸபாடா என்பவர், தாம் உருவாக்கிய “ஃப்ளைபோர்ட்’ மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு
1. உலக பாட்மிண்டன் சங்கம் சார்பில் சூப்பர் 500 சீரிஸ் தாய்லாந்து ஓபன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தனர் இந்தியாவின் சத்விக்-சிராக் ஷெட்டி.
2.வாஷிங்டன் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு நிக் கிர்ஜியோஸ்-டேனில் மெத்வதேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- சர்வதேச நண்பர்கள் தினம்
- புர்கினா பாசோ விடுதலை தினம்(1960)
- சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்(1930)
- சுதந்திர தேவி சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
- தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, 17 மாத தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்(1962)
– தென்னகம்.காம் செய்தி குழு