தமிழகம்

1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி விஜயா கே தஹில்ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இந்தியா

1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் உள்ளிட்ட 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சென்ற ஜூலை 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,420 கோடி டாலராக (ரூ.26.27 லட்சம் கோடி) சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.பீம் செயலி மற்றும் “ரூபே’ அட்டை வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 20 சதவீதத்தை ஊக்கத் தொகையாக அளிக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.


உலகம்

1.அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸா, முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ள 9 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸூம் இடம் பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.உலக பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

2.இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.


ன்றைய தினம்

  • சர்வதேச நண்பர்கள் தினம்
  • புர்கினா பாசோ விடுதலை தினம்(1960)
  • சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்(1930)
  • சுதந்திர தேவி சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
  • தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, 17 மாத தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்(1962)

–தென்னகம்.காம் செய்தி குழு