தமிழகம்

1.ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

2.இந்தியாவில் தற்போது பயிரிடப்பட்டு வரும் 700 வகையான பூண்டு வகைகளில் தனிச்சுவை, மருத்துவப் பண்புகள் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு தகுதி கிடைத்துள்ளது.


இந்தியா

1.இந்திய கடற்படைக்கு அதிநவீன 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைப்பது தொடர்பாக ரூ.45,000 கோடி மதிப்பில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

2.உச்சநீதிமன்றமும், தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் இடம்பெறுமா என்பது குறித்தான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


வர்த்தகம்

1.வங்கிகளின் குறுகிய கால கடனுக்களுக்கான வட்டி வகிதமான ரெப்போ வட்டி, 6.25 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் மூன்று மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

2.சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது.இது, பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது.எனினும், 50க்கும் மேற்பட்ட புள்ளிகள், வளர்ச்சியை குறிப்பதால், சேவைகள் துறை, தொடர்ந்து, 10 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனங்களுக்கு புதிய, ஆர்டர்கள் குறைந்ததால், அவை, பணிக்கு அமர்த்திய ஆட்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.


உலகம்

1.பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஜயீத் பதக்கம் வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2.தென் கொரியாவில் நாடு தழுவிய அளவில் 5ஜி அதிவேக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் முன்னதாக புதன்கிழமை இரவு 11 மணிக்கு சேவை தொடங்கப்பட்டுவிட்டது.


விளையாட்டு

1.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் கே.ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்றில் தாய்லாந்தின் கோசிட் பிரதாப்பை 21-11, 21-15 என்ற கேம் கணக்கில் வென்றார். காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் லோங்குடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த்.மகளிர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்றில் 5-ஆம் நிலை வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 7-21 என்ற கேம் கணக்கில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனை சுங் ஜி ஹியுனிடம் தோல்வியுற்றார்.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய கடல்சார் தினம்
  • பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
  • அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1782)
  • மகாத்மா காந்தி, தண்டி யாத்திரையை நிறைவு செய்தார்(1930)
  • ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)

– தென்னகம்.காம் செய்தி குழு