தமிழகம்

1.பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில்  நடைபெறவுள்ள ஆசிரியர் தினவிழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.


இந்தியா

1.இந்திய விமானப் படையில் அதிநவீன அப்பாச்சி ஏஹெச்-64இ ரகத்தைச் சேர்ந்த 8 ஹெலிகாப்டர்கள்  இணைக்கப்பட்டன.

2.உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் தலைவராக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  பொறுப்பேற்றார்.
உலகில் உள்ள 109 நாடுகளைச் சேர்ந்த 115 தேர்தல் ஆணையங்கள் இணைந்து இந்தக் கூட்டமைப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தென் கொரியாவில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது.


வர்த்தகம்

1.ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.

2.ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு  ஒப்புதல் வழங்கியது.


உலகம்

1.2019-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதி பரிந்துரைப் பட்டியலில் பிரிட்டன்-இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் குயிஷாட் நாவல் இடம் பெற்றுள்ளது.

2.தூய்மை இந்தியா திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.


விளையாட்டு

1.ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியினர் முதலிடம் பெற்று உள்ளனர். நிறைவு நாளான திங்கள்கிழமை மானுபாக்கர்-செளரவ் செளதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

2.யுஎஸ் ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன் நவோமி ஒஸாகா தோல்வியடைந்தார்.ஆடவர் பிரிவில் நான்காம் சுற்றில் முன்னணி வீரர் ரபேல் நடால் 6-3, 3-6. 6-1, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • ஜார்ஜ் ஈஸ்ட்மேன் தான் கண்டுபிடித்த கோடாக் கேமிராவிற்கு காப்புரிமம் பெற்றார்.(1888)
  • அர்ஜென்டினா அகதிகள் தினம்
  • அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1978)
  • அமெரிக்க செய்தித்தாள் தினம்
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)

– தென்னகம்.காம் செய்தி குழு