தமிழகம்

1.இந்திய செஞ்சிலுவை சங்க தமிழகக் கிளையின் துணைத் தலைவராக எஸ்.ஜி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.சென்னையில் காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.


இந்தியா

1.பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் – ஒரே அட்டை’ திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும். சுங்கச் சாவடிகளிலும் இந்த அட்டை மூலம் பணம் செலுத்தலாம்.

2.இராம் ஹபீப் – 30 வயதான இவர்தான் இந்தியாவின் முதல் காஷ்மீரிய முஸ்லீம் பெண் விமான ஓட்டி. இதற்கு முன்னர் காஷ்மீரைச் சேர்ந்த தன்வி ரய்னா அவ்வூரின் முதல் பெண் விமான ஓட்டியாக ஏர் இந்தியாவில் பணிபுரிந்தார்.


வர்த்தகம்

1.ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் 8.46 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை.

2.தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம்

1.சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சார்பில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் ஹஸ்ஸா அல்-மசூரி (34), சுல்தான் அல் நேயாதி (37) அனுப்பப்பட உள்ளனர்.

2.சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடிஸ்-ஸை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.


விளையாட்டு

1.இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக்  அறிவித்துள்ளார்.

2.அமெரிக்காவில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • ஜார்ஜ் ஈஸ்ட்மேன் தான் கண்டுபிடித்த கோடாக் கேமிராவிற்கு காப்புரிமம் பெற்றார்.(1888)
  • அர்ஜென்டினா அகதிகள் தினம்
  • அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1978)
  • அமெரிக்க செய்தித்தாள் தினம்
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)
  • தென்னகம்.காம் செய்தி குழு