Current Affairs – 4 October 2019
தமிழகம்
1.தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகள் குறித்த விழிப்புணா்வு கையேடுகளை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா்.
2.தலைக்கவசம் அணியாத விதி மீறலுக்காக நடப்பாண்டில் ஆகஸ்டு மாதம் வரை 43 லட்சத்து 31 ஆயிரத்து 37 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை டிஜிபி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
1.ராஜஸ்தான், கேரளம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநில உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
2.நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆா்பிட்டா் பகுதி, புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் வெளியிட்டுள்ளது.
வர்த்தகம்
1.மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.வணிக வரி துறையில், நுண்ணறிவு பிரிவு துவங்கிய மூன்று மாதத்தில், வரி ஏய்ப்பு செய்தோரிடமிருந்து, 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம்
1.வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தாா். இவரது இப்பயணத்தின்போது இந்தியா-வங்கதேசம் இடையே நீா்வழித் தடம் தொடா்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.இந்திய அரசின் உதவியுடன் மோரீஷஸ் நாட்டில் கட்டப்பட்ட ‘இஎன்டி’ மருத்துவமனை மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் ஜகந்நாத்துடன் இணைந்து காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
3.பிரெக்ஸிட்டுக்குப் பிறகு தங்களுடனான வர்த்தக உறவு குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முன்வைத்துள்ள வரைவு ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய யூனியன் அதிருப்தி தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.உலக சாம்பியன் பெல்ஜியத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வென்று ஹாக்கி டெஸ்ட் தொடரை 5-0 என கைப்பற்றியது இந்திய ஆடவா் அணி.
2.உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா்கள் பிரகனாநந்தா, திவ்யா தேஷ்முக் ஆகியோா் 2-ஆவது வெற்றி பெற்றனா்.
3.சீன ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் நவோமி ஒஸாகா, வோஸ்னியாக்கி, ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
இன்றைய தினம்
- உலக வன விலங்குகள் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
- இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
- மெக்சிகோ குடியரசானது (1824)
- முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)
– தென்னகம்.காம் செய்தி குழு