Current Affairs – 4 October 2018
தமிழகம்
1.தேசிய தர உறுதித் திட்டத்தின்கீழ் சிறந்த மருத்துவ சேவைக்காக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவமனைகளுக்கு தரச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை மத்திய சுகாதாரத் துறை அண்மையில் வழங்கியது. இதேபோன்று, அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறந்த தூய்மைப் பராமரிப்புக்காக 4 அரசு மருத்துவமனைகளுக்கு காயகல்ப் விருதுக்கான கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு “சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படவுள்ளது.
3.கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை, தமிழக சிறைகளில் 157 கைதிகள் மரணமடைந்துள்ளனர் என அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
4.தமிழக காவல் துறையில் 3 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.தமிழக காவல்துறையில் 4 ஐ.ஜி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டார்.
இந்தியா
1.உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வரை, 13 மாதங்கள் ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
2.ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காக, அவர்களது செல்லிடப்பேசிகளில் “பேனிக்’ பட்டனை பயன்படுத்துவதற்கான பரிசோதனை, உத்தரப் பிரதேசத்தில் 47 மாவட்டங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறைத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
3.ஹிமாசலப் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தகம்
1.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும்.
2.கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.105 அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு குவிண்டால் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,840 கிடைப்பது உறுதியாகியுள்ளது.
உலகம்
1.வேதியியல் துறையில் சாதனை புரிந்தமைக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் பிரான்செஸ் அர்னால்ட், ஜார்ஜ் ஸ்மித் மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர் கிரகோரி வின்டெர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நொதி திறனின் பரிணாம வளர்ச்சியை பயன்படுத்தி, உயிரி எரிபொருள் முதல்கொண்டு மருந்துகள் வரை ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்தமைக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2.பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரார்டு கொல்லம்ப், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து, அந்நாட்டின் பிரதமர் எட்வர்டு ஃபிலிப்பே தற்காலிகமாக உள்துறை அமைச்சகத்தின் பணிகளையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3.ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு ஐ.நா. சா்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4.ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷ்ய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
விளையாட்டு
1.திருச்சியில் 31-ஆவது அகில இந்திய ரயில்வே சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.
2.சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்றைய தினம்
- உலக வன விலங்குகள் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
- இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
- மெக்சிகோ குடியரசானது (1824)
- முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)
- தென்னகம்.காம் செய்தி குழு