Current Affairs – 4 November 2018
தமிழகம்
1.கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
2.இனி வரும் காலங்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை பத்து மாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா
1.கர்நாடகத்தில் 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
2.ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 28 லட்சம் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ரகுவர் தாஸ் அறிவித்துள்ளார்.
வர்த்தகம்
1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 144 கோடி டாலர் சரிவைக் கண்டுள்ளது.
2.மத்திய அரசு வெளியிடும் அடுத்த கட்ட தங்கப் பத்திரங்கள் விற்பனை நவ.5-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
3.இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே, லிபுலேக் கணவாய் வழியாக இந்த ஆண்டு நடைபெற்ற வணிகம் ரூ.6 கோடியைக் கடந்துள்ளதாக வணிக அலுவலர் பி.எஸ். குட்டியால் தெரிவித்துள்ளார்.
உலகம்
1.ஜிம்பாப்வே நாட்டில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையே சுரங்கம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
விளையாட்டு
1.சி.கே. நாயுடு கோப்பைக்கான 23 வயதுக்குட்பட்டோர் போட்டியில் புதுச்சேரி வீரர் சித்தாத்சிங் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
2.சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஏஐபிஏ) சார்பில் 10-ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகள் தில்லியில் நவம்பர் 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்றைய தினம்
- பனாமா கொடி நாள்
- இத்தாலி ராணுவ படை தினம்
- வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)
- ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
- அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)
- தென்னகம்.காம் செய்தி குழு