Current Affairs – 4 May 2019
தமிழகம்
1. கோவையில் இரண்டாவது உலகப் பனைப் பொருளாதார மாநாடு தொடங்கியது.
இந்தியா
1.ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் பானி புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். ஒடிஸாவின் புரி, தலைநகர் புவனேசுவரம் ஆகிய நகரங்களும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
2.இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு வரும் ஜூலை 9 முதல் 16-ஆம் தேதிக்குள் செலுத்தப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
3.இந்தியக் கடற்படையில் 36 ஆண்டுகாலமாகப் பணியாற்றிய ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பல், வரும் 6-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறது.
வர்த்தகம்
1.தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த காக்னிஸன்ட் நிறுவனத்தின் நிகர வருவாய் முதல் காலாண்டில் 15 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
2.தனியார் நுகர்வு சரிந்து போனதன் காரணமாக, கடந்த 2018-19 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறையும் என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தியர்கள் அதிக அளவில் கடந்த ஆண்டில் முதலீடு செய்துள்ளது, லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
விளையாட்டு
1.பிரபல கோல்ஃப் வீரரான டைகர் உட்சுக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான அதிபரின் சுதந்திர பதக்கம் விருது வழங்கப்பட உள்ளது.
2.இந்திய தேசிய வாலிபால் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக செர்பியாவின் டிரேகன் மிஹைலோவிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி அரையிறுதிக்கு இந்திய நட்சத்திரங்கள் ஜோஷ்னா சின்னப்பா, செளரவ் கோஷல் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- உலக தீயணைப்பு படையினர் தினம்
- சீனா இளைஞர் தினம்
- கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)
- கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910)
- அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)
– தென்னகம்.காம் செய்தி குழு