தமிழகம்

1.சென்னையில் இயங்கி வரும் 43 ஆயிரம் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ். கருவி, பேனிக் பட்டன் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2.சொத்து ஆவணப் பதிவுகளின்போது, சரியான வருமான வரி கணக்கு எண்ணைப் (PAN) பதிவிடுவது அவசியம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.சொத்து ஆவணப் பதிவுகளின்போது, சரியான வருமான வரி கணக்கு எண்ணைப் (பான்) பதிவிடுவது அவசியம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2.தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 65-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 70 கலைஞர்கள் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

 


வர்த்தகம்

1.ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் ஜனவரி-மார்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில் ரூ.2,230 கோடி நிகர லாபம் ஈட்டியது. 2017-18 நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.2,474 கோடியுடன் ஒப்பிடும்போது இது 9.8 சதவீதம் குறைவாகும்.


உலகம்

1.சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் கப்பல்களையும், நில இலக்குகளையும் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைத் தளவாடங்களையும் சீனா குவித்துள்ளது.

2.வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையிலான போரை நிரந்தரமாக முடித்து வைப்பதற்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அந்நாட்டு முன்னாள் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.இந்திய பாட்மிண்டன் வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

 


ன்றைய தினம்

  • உலக தீயணைப்பு படையினர் தினம்
  • சீனா இளைஞர் தினம்
  • அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)

–தென்னகம்.காம் செய்தி குழு