Current Affairs – 4 March 2019
தமிழகம்
1.வருமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய்நலப் பெட்டகம் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு சுகாதார நலத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்தியா
1.வங்கிக் கணக்குத் தொடங்கவும், புதிய சிம் கார்டுகளை வாங்கவும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
வர்த்தகம்
1.ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் உலோகங்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.
உலகம்
1.நேபாளத்தின் முன்னாள் துணைப் பிரதமரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பரத்மோகன் அதிகாரி (83) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
2.அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் தயாரித்துள்ள விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லக் கூடிய புதிய விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.
விளையாட்டு
1.பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் வினேஷ் போகட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2.2022 ஆசியப் போட்டியில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
ஓசிஏ பொதுக் குழுக் கூட்டம் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சீனாவின் ஹாங்ஷுவில் வரும் 2022-இல் நடக்கவுள்ள ஆசியப் போட்டியில் கிரிக்கெட்டை மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இன்றைய தினம்
- அசாம் மாநிலம், அசோம் என பெயர் மாற்றப்பட்டது(2006)
- கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது(1994)
- எமிலி பேர்லீனர், மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்(1877)
- பிரிட்டனின் முதலாவது மின்சார டிராம் வண்டி, கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)
- சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை கண்டறிந்தனர்(1275)
– தென்னகம்.காம் செய்தி குழு