Current Affairs – 4 June 2019
தமிழகம்
1.துணை ஆட்சியராகத் தேர்வு செய்யப்பட்ட 28 பேருக்கான பணி நியமன உத்தரவுகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்தார்.
2.தமிழக காவல்துறையில் 41 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா
1.6-ஆம் வகுப்பு முதல் 3-ஆவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக கற்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டது. இதுதொடர்பான முந்தைய வரைவு அறிக்கையில், சில திருத்தங்களைச் செய்து புதிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2.தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய கேபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1. ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.
2.கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ.71,500 கோடி வங்கி ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆர்பிஐ தகவல் தெரிவித்துள்ளது.
3.கடந்த மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக,
’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.தேவை அதிகரிப்பும், அதன் காரணமாக, துறைகளில் வேலை வாய்ப்புகள் உயர்ந்ததும் இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளது.
உலகம்
1.தொழில் ரீதியாகவும், சுற்றுலாவாகவும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர். உலகளவில் தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்வோர் அதிகமுள்ள 31 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இருந்து, அதிகபட்சமாக 80 சதவீதம் பேர் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர்.
2.வெனிசூலாவில் உள்ள தனது தூதரகப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனடா அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று வரும் கான்டர் பிட்ஸ்ஜெரால்ட் சர்வதேச 21 வயதுக்குட்பட்டோர் 4 நாடுகள் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
2.பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு ஜோகோவிச், மகளிர் பிரிவில் பிரிட்டன் வீராங்கனை ஜோஹன்னா கொண்டா, மடிஸன் கீய்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்.
3.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- தொங்கா விடுதலை தினம்(1970)
- இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் இறந்த தினம்(1925)
- முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன(1917)
– தென்னகம்.காம் செய்தி குழு