தமிழகம்

1.தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்  தொடங்கி வைத்தார்.இந்தச் செயலியின் அனைத்து பதிவுகள், தரவுகள் www.ceoportal.in என்ற இணையதளத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது.

2.ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.


இந்தியா

1.பள்ளிகளில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

2.ப்ளூ ஃப்ளாக் எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் பெறும் வகையில், ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த 13 கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச அங்கீகாரம் பெறும் இத்திட்டத்துக்கு ஒடிஸா, மகாராஷ்டிரம், புதுச்சேரி, கோவா, டாமன்-டையு, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபார் தீவுகள் ஆகிய கடற்கரையோர மாநிலங்களைச் சேர்ந்த 13 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

3.மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் பங்குபெறும் 2 நாள் மாநாடு தில்லியில் தொடங்குகிறது.

4.அணு ஆயுதங்களுடன் நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் வலிமை கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.


வர்த்தகம்

1.கடந்த 2017ஆம் ஆண்டில் விமானக் கட்டணம் சராசரியாக 18 சதவீதம் வரை குறைந்திருந்ததாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

2.தொலைத் தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா சென்ற ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 1 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.


உலகம்

1.தங்கள் நாட்டுத் தயாரிப்புகள் மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்தால், வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.


விளையாட்டு

1.நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்-உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

2.தென் ஆப்ரிக்கா அணிக்காக சிறப்பாக செயல்படும் நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சார்பில் விருது வழங்கப்படும். இதில், 6 விருதுகளை வேகப்பந்துவீச்சாளர் ரபாடா தட்டிச்சென்றார்.


ன்றைய தினம்

  • தொங்கா விடுதலை தினம்(1970)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் இறந்த தினம்(1925)
  • முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன(1917)

–தென்னகம்.காம் செய்தி குழு