Current Affairs – 4 July 2019
தமிழகம்
1.அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெறும் 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2.மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா
1.கடந்த 2018-ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) 316 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துளை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
2.ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
3.வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வர்த்தகம்
1.நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018–2019 நிதியாண்டில், மொத்த பிரீமிய வருமானமாக 3.37 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 6.08 சதவீத வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில், பாலிசியின் பயன் தொகையாக, 2.51 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டை விட , இது, 26.66 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
உலகம்
1.நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளைக் கைவிடும் அமெரிக்க – ரஷிய ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதற்கான சட்ட மசோதாவில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டார்.
2.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் எம்.பி.க்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு
1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
2.கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், செளரவ் வர்மா, லக்ஷயா சென் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
3.மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் விழ்த்திய அமெரிக்கா, இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.
4.நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடி செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
இன்றைய தினம்
- பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
- அமெரிக்க விடுதலை தினம்(1776)
- இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)
- நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)
– தென்னகம்.காம் செய்தி குழு