தமிழகம்

1.வீட்டில் இருந்தபடியே வருவாய்த் துறையின் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய இணையதளத்தை முதல்வர்  தொடங்கி வைத்தார்.

2.உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது.

3.கன்னியாகுமரி உள்பட மூன்று இடங்களில் கலை கிராமங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.


இந்தியா

1.தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க சி விஜில்(cVIGIL) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2.காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பாளராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.முக்கிய எட்டு உள்கட்டமைப்புத் துறைகளைச் சேர்ந்த உற்பத்தி வளர்ச்சி சென்ற மே மாதத்தில் 10 மாதங்கள் காணாத பின்னடைவைக் கண்டுள்ளது. நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், உரம் உள்ளிட்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி சென்ற மே மாதத்தில் 3.6 சதவீதம் என்ற அளவில் சரிவைக் கண்டுள்ளது.


உலகம்

1.இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சீன ராணுவக் குழுவினர் 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு  வந்தனர்.

2.தாய்லாந்தின் மழை வெள்ளம் காரணமாக இருண்ட குகைக்குள் 10 நாள்களாகச் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது கால்பந்து பயிற்சியாளரை  மீட்புக் குழுவினர் உயிருடன் கண்டறிந்தனர்.


விளையாட்டு

1. உலக கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன். நேற்று நடந்த ‘ரவுண்டு–16’ போட்டியில் சுவிட்சர்லாந்தை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

2.ஜகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 524 வீரர், வீராங்கனைகள் குழு கலந்து கொள்கிறது.


ன்றைய தினம்

  • பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
  • அமெரிக்க விடுதலை தினம்(1776)
  • இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)
  • நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)

–தென்னகம்.காம் செய்தி குழு