தமிழகம்

1.தமிழகத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக 15 தொழில் ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வியாழக்கிழமை அளித்தது.
தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

2.பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தொடங்கிவைக்கிறார்.


இந்தியா

1.சந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த மாதம் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) மூத்த அதிகாரி தெரிவித்தார்.

2.பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

3.இந்தியாவில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.சென்ற 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

2.கடந்த ஆண்டு, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்துள்ளதாக, ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம் ஆய்வொன்றில் தெரிய வந்துஉள்ளது.

3.இந்தியாவில், தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த அக்டோபர் மாதத்தில், 119.20 கோடியாக உயர்ந்துள்ளது.


உலகம்

1.பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக  தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.இதுவரை அறியப்படாத அந்தப் பகுதியின் படங்களையும் முதல் முறையாக அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.
இது, விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


விளையாட்டு

1.தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.

2.ரோஜர் பெடரரின் அபார ஆட்டத்தால் ஹாஃப்மேன் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஸ்விட்சர்லாந்து முன்னேறியது.


ன்றைய தினம்

  • பர்மா விடுதலை தினம்(1948)
  • ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது(1884)
  • பிரிட்டன் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது(1912)
  • ஆங்கில அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம்(1643)
  • வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்(1854)

– தென்னகம்.காம் செய்தி குழு