தமிழகம்

1.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

2.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு  கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்.


வர்த்தகம்

1.உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும், 27 கி.மீ., நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன.

2.இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும், மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. விரைவான சரக்கு ஏற்றுமதிக்கு மின்னணு, ‘டேக்‘ தொழில்நுட்பத்தை சுங்கத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால், வணிகர்களுக்கு, சரக்கு போக்குவரத்து செலவும், நேரமும் மிச்சமாகியுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.ஐசிசி மகளிர் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா முதலிடம் பெற்றுள்ளார்.

2.இந்தியா-அயர்லாந்து மகளிர் ஹாக்கி அணிகள் இடையில் நடைபெற்ற முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.


ன்றைய தினம்

  • சர்வதேச புற்றுநோய் தினம்
  • இலங்கை சுதந்திர தினம்(1948)
  • பிலிப்பைன்ஸ்-அமெரிக்க போர் ஆரம்பமானது(1899)
  • முதல் முறையாக ரேடியம் ஈ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது(1936)
  • யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக, சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ எனப் பெயர் மாற்றப்பட்டது(2003)

– தென்னகம்.காம் செய்தி குழு