தமிழகம்

1.மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் டிச.10 முதல் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2.சென்னை உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக சுப்ரமணிய பிரசாத் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்தியா

1.செலவினங்கள் துறை செயலராக இருந்த அஜய் நாராயண் ஜா , நிதித்துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை வெளியான அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக அந்த மாநில அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் முஸ்லிம் இவர் ஆவார்.

3.அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ஆம் தேதியை அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு தினமாக கடைபிடிக்க இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

4.இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில், புதிதாக 56 போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவுள்ளதாக கடற்படை தளபதி சுனில் லாம்பா தெரிவித்தார்.


வர்த்தகம்

1.நிக்கி – மார்கிட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, அக்டோபரை விட, நவம்பரில் அதிகரித்துள்ளது. அதனால், இவ்வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 54.0 புள்ளியாக உயர்ந்துள்ளது.
இது, அக்டோபரில், 53.1 ஆக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 16 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.

2.இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக, மகேந்திர சிங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3.ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் (ஹெச்யுஎல்) இயக்குநர் குழு, கிளாக்ஸோ  ஸ்மித்கிளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் (ஜிஎஸ்கேசிஹெச் இந்தியா) உடன் இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


உலகம்

1.பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (ஒபெக்) விலக கத்தார் முடிவு செய்துள்ளது.

2.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் ரஷ்ய ராக்கெட் மூலம் திங்கள்கிழமை வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


விளையாட்டு

1.நியூஸிலாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் தனது காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது ஆர்ஜென்டீனா.

2.2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.


ன்றைய தினம்

  • இந்திய கடற்படை தினம்
  • தாய்லாந்து தேசிய சுற்றுசூழல் தினம்
  • உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி அப்சர்வர்-ன் முதலாவது இதழ் வெளிவந்தது(1791)
  • இந்தியாவில் சதி முறையை ஒழிக்க கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829)
  • பிரெஞ்ச் அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது(1958)
  • தென்னகம்.காம் செய்தி குழு