தமிழகம்

1.இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வழக்கறிஞர்களின் ஆவணங்களை ஆன்லைன் மூலமாக சரிபார்க்கும் திட்டத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.பானுமதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.


இந்தியா

1.ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு மெகபூபா முப்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.இந்தியாவின் நிதி உதவியுடன் அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
2.சர்வதேச கடல் அமைப்பு கவுன்சில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.நியூசிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பிரித்வி ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1360 – பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.1893 – மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
3.1933 – யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு