தமிழகம்

1.வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.


இந்தியா

1.மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நடத்தி வரும் யாத்திரைக்கு பதிலடியாக மாநிலம் தழுவிய யாத்திரையை நடத்த எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் முடிவு செய்துள்ளன.


வர்த்தகம்

1.எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ரூ.4,815.57 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,068.93 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
நிகர லாபம் ரூ.567.18 கோடியிலிருந்து 7.39 சதவீதம் அதிகரித்து ரூ.609.13 கோடியை எட்டியது

2.நடப்பு நிதியாண்டில் மூன்றாவது வரிசையில் ]ஆகஸ்ட் 5 வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை மத்திய அரசு கிராமுக்கு ரூ.3,499-ஆக நிர்ணயித்துள்ளது.

3.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,965 கோடி டாலராக (ரூ.29.64 லட்சம் கோடி) குறைந்துள்ளது.

4.பொதுத் துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கி முதல் காலாண்டில் ரூ.52 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

5.பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.103 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.84.96 கோடியுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகமாகும்.


உலகம்

1.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 15ஆவது இந்திய-அமெரிக்க பாதுகாப்புக் கொள்கை குழுக் கூட்டம் கடந்த  நடைபெற்றது.
அதில், இந்தியத் தரப்பில் பாதுகாப்புத் துறை செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அதிகாரிகளும், அமெரிக்க தரப்பில் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஜான் ரூட் தலைமையிலான அதிகாரிகளும் பங்கேற்றனர்.பாதுகாப்புத் துறையில் பரஸ்பரம் ஒத்துழைக்க இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக் கொண்டன.

2.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் தாலிபான் பிரதிநிதிகளிடையே  மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.


விளையாட்டு

1.தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சத்விக் ரங்கி ரெட்டி-சிராக்ஷெட்டி இணை முன்னேறியுள்ளது.

2.ரஷ்ய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் நீரஜ், லவ்லினோ போரோகைன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
கஸ்பிஸ்க் நகரில் உம்கனோவா சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

3.உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றது.
மகளிர் 40 கிலோ பிரிவில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி 15 வயது கோமல் தங்கம் வென்றார்.
ஏற்கெனவே 65 கிலோ பிரிவில் சோனம் இந்தியாவின் முதல் தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

4.பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் போது, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மீது முறைகேடு புகார்களை கூறிய வீரர் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

  • அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)
  • சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)
  • அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
  • நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)

– தென்னகம்.காம் செய்தி குழு