தமிழகம்

1.கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடராத கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.தமிழகத்தில் 11 போலி கல்வி நிறுவனங்களின் பட்டியல்
டாக்டர் ஜெஸ்ஸி ஜியார்ஜ் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
மெரிட் ஸ்விஸ் ஆசியான் ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்.
ஐசிஎஃப்ஏஐ
இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடட்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்
ஸ்டேன்ஸ்ஃபீல்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ்
ராய் பிசினஸ் ஸ்கூல்
அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்


இந்தியா

1.பொது மக்களின் சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

2.ரயில் பயணக் கட்டணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தியமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

3.உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வர்த்தகம்

1.நாட்­டின் சேவை­கள் துறை, தொடர்ந்து முன்­னேற்­றம் கண்டு வரு­கிறது. தேவைப்­பாடு அதி­க­ரித்­த­தால், ஜூலை­யில், சேவை­கள் துறை, 22 மாதங்­களில் காணாத வளர்ச்சி வேகத்தை கண்­டுள்­ளது.


உலகம்

1.ஜிம்பாப்வேயில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் எமர்சன் நங்கக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் 34-ஆவது பிறந்த நாளையொட்டி அவரை ஆசியாவின் சின்னமாக (ஐகான்) ஏஎஃப்சி அறிவித்துள்ளது.

2.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். அதே நேரத்தில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.


ன்றைய தினம்

  • அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)
  • சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)
  • அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
  • நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)

–தென்னகம்.காம் செய்தி குழு