தமிழகம்

1.மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இந்தியா

1.அரசியல் நிதிக்காக தேர்தல் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீது வெள்ளிக்கிழமை (ஏப்.5) விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2.2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாநில அரசின் மோசமான அணை பராமரிப்பே காரணம் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சட்ட வல்லுநர் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


வர்த்தகம்

1.பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மார்ச் மாத வாகன விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

2.வங்கி சாரா நிதி நிறுவனமான எல் & டி பைனான்ஸ் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடியை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது.


உலகம்

1.கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் எம்.ஹெச்.60ஆர் ஷீ ஹாக் ரக அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

2.வெனிசூலா நாடாளுமன்றத் தலைவரும், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவருமான ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யும் தீர்மானத்தை அந்த நாட்டு அரசியல் சாசன நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.


விளையாட்டு

1.மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

2.ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்திய மகளிர் கால்பந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தியது.


ன்றைய தினம்

  • செனிகல் குடியரசு தினம்
  • அங்கோலா அமைதி தினம்
  • உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது(1973)
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது(1975)
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1855)
  • கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் இறந்த தினம்(1968)

– தென்னகம்.காம் செய்தி குழு