தமிழகம்

1.காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் அறிவித்தபடி, திருச்சியில் ஒழுங்காற்றுக் குழுவின் 19-ஆவது கூட்டம் நடைபெறுகிறது.

2.தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள பொதுத்தோ்வு குறித்த வழிமுறைகளை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.மும்பை காவல்துறை முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகா், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

2.மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.


வர்த்தகம்

1.இண்டிகோ விமான நிறுவனம், 500 ஏர்பஸ் விமானங்களை வாங்க, ஆர்டர் செய்துள்ளது. இதன் மதிப்பு, 2.35லட்சம் கோடி ரூபாய்.

2.அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையகமாக வைத்து செயல்படும், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்தியாவில் உள்ள தன் கிளை தொழில்களில், 4,500 கோடி ரூபாயை சமீபத்தில் கூடுதலாக முதலீடு செய்துள்ளது.

3.கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் புதன்கிழமை மீண்டும் 40,000 புள்ளிகளைக் கடந்தது. மொத்தம் 220.03 புள்ளிகள் உயா்ந்து, 40,051.87 புள்ளிகளாக சென்செக்ஸ் நிலைகொண்டது.தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 57.25 புள்ளிகள் அதிகரித்து 11,844.10 புள்ளிகளாக நிலைத்தது.கூகிள் ப்ளே ஸ்டோரில் தென்னகம் என்று தேடி எங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.


உலகம்

1.சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின் முதல் குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக பாகிஸ்தானில் நாணயம் வெளியிடப்பட்டது.பாகிஸ்தானின் ஸ்ரீ நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தவா் குருநானக் தேவ். சீக்கிய மதத்தைப் பரப்பிய அவரது 550-ஆவது பிறந்த தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

2.ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் அந்நாட்டு அமைச்சா்கள் 12 போ் குழுவுடன் வியாழக்கிழமை இந்தியா வருகிறாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவா் பேச்சு நடத்துகிறாா்.

3.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் தீா்மானத்தை, அந்த நாட்டின் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது.

4.செய்தியாளா்களையும், மனித உரிமை ஆா்வலா்களையும் இணையம் மூலம் வேவு பாா்ப்பதாக இஸ்ரேலின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் மீது  வாட்ஸப் நிறுவனம் வழக்குத் தொடா்ந்துள்ளது.


விளையாட்டு

1.23 வயதுக்குள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றில் இந்திய வீரா் ரவீந்தா் 61 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றாா்.

2.ஜப்பானில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியின் அரையிறுதியில் வெற்றி பெற்று இந்திய வீரா் ஷிவ தாபாவும், பூஜா ராணியும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

3.சா்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் பிரெஞ்ச் ஓபனில் வெள்ளி வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராங் ரெட்டி இணை 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய இணை முதல் 10 இடங்களில் வருவது இதுவே முதல் முறையாகும். முதல் இரண்டு இடங்களில் இந்தோனேஷியா வீரா்கள் உள்ளனா்.


ன்றைய தினம்

  • உலக சிக்கன தினம்
  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
  • ஜான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)

– தென்னகம்.காம் செய்தி குழு