தமிழகம்

1.சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து விசாரணையை வரும் நவம்பர் 2- ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2.தீபாவளிக்கு தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


இந்தியா

1.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் குழு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி, எம்.ஆர்.ஷா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோரின் பெயர்களை மத்திய அரசிடம் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.

2.நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையையும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3.கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தேபாசிஸ் கர் குப்தா செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.


வர்த்தகம்

1.பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவில்(COAL INDIA) கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 3 சதவீதத்தை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.5,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.வளைகுடா நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதன் ஒரு பகுதியாக குவைத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

2.பயங்கரவாத வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு விதிக்கப்பட்டிருந்த 13 ஆண்டு சிறைத் தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.


விளையாட்டு

1.சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கீமோ பாலை ஸ்டம்ப்பிங் செய்தார் தோனி. 0.08 வினாடிகளில் தோனி இந்த ஸ்டம்ப்பிங்கை செய்து கீமோ பாலை ஆட்டமிழக்கச் செய்தார்.
ஏற்கெனவே கடந்த 2016-இல் மேல்போர்னில் நடைபெற்ற ஆஸி. அணிக்குஎதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இதே ஜடேஜா பந்துவீச்சில் ஜார்ஜ் பைலியை குறைந்த நேரத்தில் ஸ்டம்ப்பிங் செய்தார் தோனி. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

2.சீனாவில் நடைபெற்று வரும் டபிள்யுடிஏ ஹூஹாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை ஆர்யனா சபலென்கா முன்னேறியுள்ளார்.


ன்றைய தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம்(1984)
  • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)
  • அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)
  • தென்னகம்.காம் செய்தி குழு