தமிழகம்

1.தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2.ஆசிரியர் பணிக்கான டெட் தகுதித் தேர்வுக்கு 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இந்தியா

1.நாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் பதவியேற்றவர்களில்
அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்ட 20 பேர் முதல் முறை மத்திய அமைச்சர்களாவர். அவர்களில் அர்ஜூன் முண்டா, ரமேஷ் போக்ரியால் ஆகியோர் முன்னாள் முதல்வர்களாவர்.

2.ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்.


வர்த்தகம்

1. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தெரிவித்துள்ளது.

2.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2018-19ஆம் ஆண்டுக்கான மொத்த வணிகம் 9.91 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

3.தமிழக வணிக வரித் துறையில், நாளை முதல், ‘நுண்ணறிவுப் பிரிவு’ நடைமுறைக்கு வருகிறது.


உலகம்

1.பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூன் 15-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

2.இஸ்ரேல் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் கூட்டணி அரசை அமைக்க முடியாத நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தலை நடத்த அந்த நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.


விளையாட்டு

1.ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

2.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சார்பில் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2019 லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.


ன்றைய தினம்

  • சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
  • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)
  • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)
  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)
  • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

– தென்னகம்.காம் செய்தி குழு