தமிழகம்

1.குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2.ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரும் நேரத்தை உறுதி செய்திட பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3.தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக பி.ரவீந்திரநாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை அதிமுக புதன்கிழமை வெளியிட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
4.தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கும்மிடிப்பூண்டி மாணவர் ஆர்.லோகேஷ்க்கு சொந்த ஊரில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
5.தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அனைத்துப் பள்ளிகள் அளவிலும், அரசுப் பள்ளிகள் நிலையிலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


இந்தியா

1.பெங்களூரில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெறவிருக்கிறது.
2.இந்தியா-இந்தோனேஷியா இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு உள்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.பிரதமர் மோடி, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோதோ இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.2,925.59 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை சவூதி அரேபியா இயற்றிவுள்ளது.சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


விளையாட்டு

1.புரோ கபடி லீக் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வீரர் தீபக் ஹூடாவை ரூ.1.15 கோடிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இத்தகைய மதிப்புக்கு வாங்கப்படும் முதல் இந்திய வீரர் தீபக் ஆவார்.


ன்றைய தினம்

1.இன்று உலகப்புகையிலை ஒழிப்பு தினம்(World No – Tobacco Day).
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு