தமிழகம்

1.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் ஆணையக் குழுவினரும் வரவுள்ளனர்.


இந்தியா

1.விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை (மிஷன் சக்தி திட்டம்) வெற்றி அடைந்தது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டது, தேர்தல் நடத்தை விதிமீறல் அல்ல என்று தேர்தல் ஆணையம்  தெரிவித்தது.


வர்த்தகம்

1.இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளிலிருந்து கடன் பெறுவது கடந்த பிப்ரவரி மாதத்தில் 9 சதவீதம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 307 லட்சம் டன்னாக குறையும் என தரக் குறியீட்டு நிறுவனமான இக்ரா மதிப்பீடு செய்துள்ளது.

3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,666 கோடி டாலரை (ரூ.28.46 லட்சம் கோடி) தாண்டியுள்ளது.


உலகம்

1.சர்வதேச அளவில் எழுந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்தியா-அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விளையாட்டு

1.இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு  கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • மால்ட்டா விடுதலை தினம்(1979)
  • ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
  • முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
  • ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)

– தென்னகம்.காம் செய்தி குழு