தமிழகம்

1.புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தனி அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்தார்.

2.சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில்  2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 சுவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.


இந்தியா

1.உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

2.நுகர்வோர் உரிமையை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

3.அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா, மக்களவையில்  நிறைவேறியது.

4.விண்ணில் புவி சுற்றுப் பாதையில் வலம் வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அடுத்த 14 நாள்களில் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், புவி சுற்றுப் பாதையில் விண்கலத்தை மூன்றாவது நிலைக்கு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உயர்த்தினர்.

5.மேற்கு வங்க மாநிலத்தின் 28-ஆவது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியேற்றார்.


வர்த்தகம்

1.நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 36 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.6.80 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நாட்டில், மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 19 லட்சம். மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய இடங்களில் முறையே, 1.42 லட்சம், 1.26 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.தமிழகத்தில் மட்டும் மூடப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை, 2016- – 17ல், 24 சதவீதமாக இருந்தது. இது, 2019 மே மாதத்தில், 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2.பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் காலாண்டு லாபம் இருமடங்கு உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.11,526.95 கோடியாக இருந்தது.


உலகம்

1.எஸ்.யு.- 30 ரக போர் விமானங்களில் பொருத்துவதற்காக ரூ.1,500 கோடி மதிப்பில் அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது.


விளையாட்டு

1.லாஸ்கபோஸ் ஏடிபி வேர்ல்ட் டூர் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • இந்தியாவில் மொபைல் போன் சேவை துவங்கப்பட்டது (1995)
  • ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
  • உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
  • சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)

– தென்னகம்.காம் செய்தி குழு