தமிழகம்

1.பிராமணர் அல்லாத ஒருவரை கோயில் அர்ச்சகராக தமிழக அறநிலையத்துறை நியமித்துள்ளது.

2.தேசிய நவீன தொழில்நுட்ப கற்றல் திட்டத்தின்கீழ் (என்.பி.டி.இ.எல்.) வழங்கப்படும் பேராசிரியர் மேம்பாட்டு ஆன்-லைன் பயிற்சிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களுக்கான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியை (எஃப்.டி.பி.) வீட்டில் இருந்தபடி என்.பி.டி.இ.எல். வலைதளம் மூலமே ஆன்-லைனில் பயிற்சி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், சுய மதிப்பீடும் செய்துகொள்ள முடியும்.


இந்தியா

1.இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை  பணி ஓய்வு பெறுகிறார்.இவரது அறிவியல் பணிகளை பாராட்டி, மத்திய, மாநில அரசுகள், பன்னாட்டு அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை 75 விருதுகளை வழங்கியுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களும் இவருக்கு கெளரவ முனைவர் பட்டம் பாராட்டியுள்ளன. ‘கையருகே நிலா’, ‘சிறகை விரிக்கும் மங்கள்யான்’, ‘அறிவியல் களஞ்சியம்’ ஆகிய தமிழ் அறிவியல் நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

2.அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர்களில் உண்மையான இந்தியர்கள் எவர்? என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதி வரைவுப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 2.89 கோடி பேருக்கு நாட்டின் குடிமக்கள் என அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 40 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

3.கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது.

4.நாட்டில் உள்ள அணைகளில் 209 அணைகள், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தவை ஆகும். இதில் கர்நாடகத்தில் உள்ள தொன்னுர் டேங்க் அணை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது ஆகும்.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டில் முதல் நான்கு மாத காலத்தில் ஆறு நிறுவனங்கள் பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.19,067 கோடியை திரட்டியுள்ளன.


உலகம்

1.அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.ஜிம்பாப்வேயில் வரலாற்று சிறப்பு மிக்க பொதுத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே போட்டியிடாமல் ஜிம்பாப்வேயில் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.பர்மிங்ஹாம் எட்பாகஸ்டனில் இந்தியாவுடன் விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம், இங்கிலாந்து ஆடவர் அணி விளையாடும் 1000-ஆவது டெஸ்ட் ஆட்டமாகும்.

2.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் எச்எஸ்.பிரணாய், இரட்டையர் பிரிவில் மனு-சுமித் இணை தகுதி பெற்றுள்ளது.

3.வெஸ்டர்ன் ஸ்டராம் அணிக்காக ஆடிய மந்தானா 4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன், 19 பந்துகளில் 52 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான டி 20 சர்வதேச ஆட்டத்தில் நியூஸிலாந்தின் சோபி டிவின்ஸ் அடித்த 18 ரன்களில் 50 ரன்கள் சாதனையை சமன் செய்தார்.


ன்றைய தினம்

  • இந்தியாவில் மொபைல் போன் சேவை துவங்கப்பட்டது (1995)
  • ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
  • உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
  • சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)

–தென்னகம்.காம் செய்தி குழு