தமிழகம்

1.தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.


இந்தியா

1.காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இன்று துவங்கி, பிப்.,13 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில், 2019 – 2020 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை (பிப்.,1) தாக்கல் செய்ய உள்ளார்.


வர்த்தகம்

1.இந்தியாவில், ஒயர் இல்லாத, ‘பிராட்பேண்ட்’ சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது என, ‘டிராய்’ எனும் தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

2.மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதுவரை, சில்லரை வர்த்தகம், வணிகர் நலன் உள்ளிட்டவற்றை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கவனித்து வந்தது.


உலகம்

1.பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்த அமைப்பிலிருந்து விலகும் யோசனையை பிரிட்டன் நாடாளுமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.

2.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு முறை பயணமாக பிப்ரவரி 11-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார்.


விளையாட்டு

1.முதல் தர (லிஸ்ட் ஏ) கிரிக்கெட்டில் 10,000 ரன்களை வேகமாகக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித் சர்மா.


ன்றைய தினம்

  • நவூறு விடுதலை தினம்(1968)
  • அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)
  • யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

– தென்னகம்.காம் செய்தி குழு