Current Affairs – 31 January 2018
இந்தியா
1.முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. அப்போது, நிலவு சூப்பர் நிலாவாக பெரிதாக தெரியும்.150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
உலகம்
1.உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
இன்றைய தினம்
1.1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட்சு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு