தமிழகம்

1.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 89 சதவீதம் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 24 சதவீதம் குறைவு. சென்னையில் இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 55 சதவீதம் குறைவாக மழை பெய்தது அதாவது 79 செ.மீ. மழைக்கு பதிலாக வெறும் 35 சதவீதம் மழையே பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இயல்பான அளவு 44 செ.மீ. மழை. இதில் 34 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.


இந்தியா

1.உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி மதன் பி லோகுர் தனது பதவியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெற்றார்.

2.சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த ‘மக்கள் மருத்துவர்’ ஜெயச்சந்திரனை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.


வர்த்தகம்

1.வலைதள சந்தை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் என, அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


உலகம்

1.வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் அக்கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா 4ஆவது முறையாக பிரதமராவது உறுதியாகியுள்ளது.

2.பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவின் பின் பகுதியில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாகும் வகையில், சீனாவின் சாங் இ-4 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியாக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-காவஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.


ன்றைய தினம்

  • விக்டோரியா மகாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
  • வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
  • மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
  • பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)

– தென்னகம்.காம் செய்தி குழு